முத்த விவகாரம் | மன்னிப்பு கோரினார் புத்த மத தலைவர் தலாய்லாமா! - Seithipunal
Seithipunal


சிறுவன் ஒருவனுக்கு முத்தமிட்ட திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா, தனது நாக்கை நீட்டி அதில் சிறுவனை முத்தமிடக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியது.

அந்த வீடியோவில், தலாய்லாமா தன் காலில் விழுந்த சிறுவன் ஒருவனின் வாயில் முத்தம் கொடுக்கிறார். மேலும், தன் நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறியுள்ளது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செயல் அருவருப்பானது, கேவலமானது, கண்டனத்திற்குரியது என்று உலகம் முழுவதிலும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிவிப்பில், சிறுவன், அவரது குடும்பம் மட்டுமின்றி உலக சகோதரர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

என்னுடைய செயல் காயப்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன். பொது இடம், கேமரா முன் அப்பாவியாக, விளையாட்டுத்தனமாக நான் இது போல் செயல்படுவது வழக்கம்" என்று தலாய்லாமா விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dalailama kisses on boy lips video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->