சுழற்றி போடும் சூறாவளி - கிரீஸில் கடலுக்குள் அடித்துச் செல்லும் கார்கள்.! வைரலாகும் வீடியோ.!
danial cyclone dragged car sea n greece
சுழற்றி போடும் சூறாவளி - கிரீஸில் கடலுக்குள் அடித்துச் செல்லும் கார்கள்.! வைரலாகும் வீடியோ.!
கிரீஸ் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து இயல்பு நிலைக்கு வருவதற்குள் அந்நாட்டில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளி வீசியுள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூறாவளியால், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
சாலைகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து கடற்கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணற்ற கார்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன. அந்த வகையில், பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ ஒன்று மூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுவரைக்கும் இந்த சூறாவளி பாதிப்புக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பனி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
danial cyclone dragged car sea n greece