மகள் வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.!
Daughter support ukraine drawing police arrested father
ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதனை பெரும்பாலும் ரஷ்ய நாட்டு மக்களே எதிர்த்து போராடி வருகின்றனர். அவ்வாறு எதிர்த்து போராட்டம் போராட்டம் நடத்துபவர்கள் மற்றும் போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை ரஷ்யா கைது செய்து சிறை தண்டனை விதித்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனது பள்ளியில் ஓவியம் வரையும் பயிற்சியின் போது உக்கரைனில் தாய் மற்றும் மகள் மீது ரஷ்யா ஏவுகணை குண்டு வீசுவது போல ஊருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியம் ஒன்றை அடைந்துள்ளார்.
இதனையடுத்து இந்த ஓவியம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் தந்தை சமூக வலைதள பக்கங்களையும் ஆய்வு செய்தனர்.
அதில் அவரும் ரஷ்ய போருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தந்தையை வீட்டு காவலில் வைத்தனர். மேலும், சிறுமியை தந்தையிடம் இருந்து பிரித்து காப்பகத்தில் சேர்த்தனர். இந்த விவகாரம் ரஷ்ய மனித உரிமை ஆர்வலர்களையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Daughter support ukraine drawing police arrested father