ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு.!
death count 35 increase in ukraine for russia missile attack
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் ஒரு ஒரு முடிவுக்கு வராமல் ஒரு தொடர் கதையாகி வந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களையும் இடம் ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது.
ஆனால், உக்ரைன் படையினரும் சளைக்காமல் பதிலடி கொடுத்ததும். சில இடங்களை திரும்ப பெற்றும் வருகிறார்கள். இதில் ஏராளமான படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று ரஷியா உக்ரைனில் டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ தெரிவித்ததாவது, ரஷ்யாவின் இந்த ஏவுகணைத் தாக்குதலில்15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்த தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்ததாவது, "அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 75 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி மாயமான 35 பேரை தீவிரமாக தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
English Summary
death count 35 increase in ukraine for russia missile attack