7 மாதங்களில் 419 பேருக்கு மரணதண்டனை - ஈரானில் கொடூரம்.!
death penalty to 419 peoples in iran
ஈரான் நாட்டில் அதிகளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 419 பேரை அந்த நாடு தூக்கிலிட்டு கொன்றுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 30% அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளதாவது:- "கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முறைப்படி ஹிஜாப் அணியவில்லை என்று கூறி அறநெறி காவலர்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்ஸா அமினி கொலையை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டம் தொடர்பாக இதுவரைக்கும் ஏழு பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இந்த ஏழு வழக்குகளிலும் நீதித்துறையின் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் நியாயமாக நடைபெறவில்லை. ஈரானின் நீதித்துறை நடவடிக்கைகள், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் நியாயமான விசாரணை நடைபெறவில்லை. உரிய நடைமுறைள் பின்பற்றப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் சட்ட அணுகல் நிராகரிக்கப்பட்டதாகவும், சித்ரவதை காரணமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
death penalty to 419 peoples in iran