சூடானில் தொடரும் மோதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்தல்லா ஹம்டோக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில், ஆர்.எஸ்.எப் துணை ராணுவ விரைவுபடையை ராணுவத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, துணை ராணுவ படைகள், ராணுவ படைகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சூடான் தலைநகர் கார்ட்டூம், டார்பூர், மெரோ உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான மோதல்களும், குண்டு வெடிப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சூடானில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் குண்டு வெடிப்பில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 1800 பேர் படுக்காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூடானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக உதவி பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சிறப்பு கண்காணிப்பு மையத்தை அமைத்துள்ளது. அவசர தேவைக்கு இந்திய தூதரக அழைப்பு எண்களை இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.

மேலும் சூடானில் ஏற்படும் வன்முறைகளை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன அதில் தலைநகர் கார்ட்டூம், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் கட்டிடங்களிலிருந்து வானுயரத்துக்கு கரும் புகை எழுந்ததை காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased to 200 due to violence in sudan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->