துருக்கி-சிரியா நிலநடுக்கம்.! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது.

துருக்கி-சிரியாவின் எல்லை நகரங்களில் கடந்த திங்கட்கிழமை 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இடுப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து உலக நாடுகளின் உதவி உடன் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 80,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதில் துருக்கியில் மட்டும் 24,617 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased to 28 thousand in earthquake hits turkey sriya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->