நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து  நேற்று காலை 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். 

நேபாளத்தின் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பஸ், எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவ இடத்திலேயே  16 பேர்  உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 25 பேர் உயிரிழந்தனர். 

இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் உயிரிழந்த 24 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் நாளை நாசிக்கிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll of Indians in Nepal bus accident rises to 41


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->