முதல் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க போர்க்கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


முதல் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க கடற்படை போர்க்கப்பலின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கார்னிஷ் செல்டிக் தீவின் கடற்கரையில் இருந்து 40 மைல் தொலைவில் முதலாம் உலகப்போரின் போது காணாமல் போன அமெரிக்க போர்க்கப்பலின் உதிரிபாகங்களை பிரிட்டின் ஆழ் கடல் நீச்சல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடலில் மூழ்கியிருந்த கப்பல் யு.எஸ்.எஸ் ஜேக்கப் ஜோன்ஸ் அமெரிக்காவின் தாக்கி அழிக்கும் டிஸ்ட்ராயர்ஸ் வகையைச் சேர்ந்த ஆறு கப்பலில் ஒன்றாகும்.

அமெரிக்காவால் 1917ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இந்த கப்பல், ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 66 அமெரிக்க போர் வீரர்கள் உயிரிழந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deep divers find US warship used in first world war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->