பாக், ஷாகித் அப்ரிடிக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர் ஷிகர் தவான்!
Dhawan reply to Afridi
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவமே காரணம் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.
அதில், "காஷ்மீரில் 8 லட்சம் ராணுவம் இருந்தும் தாக்குதல் நடைபெற்றது என்றால், அது பாதுகாப்பு தோல்வியைக் காட்டுகிறது. ஒரு மணி நேரமாக மக்கள் கொல்லப்பட்டபோதும், ராணுவத்தினர் எவரும் வரவில்லை. ஆனால் இந்தியா மட்டும் பாகிஸ்தானை குறைகிறது. உண்மையில், இந்தியா தான் இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்துகிறது" என அப்ரிடி தெரிவித்து இருந்தார்..
இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வீரர் ஷிகர் தவான், "கார்கிலில் உங்களை தோற்கடித்தோம். ஏற்கனவே நிறைய வீழ்ந்துவிட்டீர்கள், இனிமேல் ஏன் வீழ வேண்டும்? பயனற்ற பேச்சுகளுக்கு பதிலாக உங்கள் நாட்டை முன்னேற்றுங்கள். இந்திய ராணுவம் எங்கள் பெருமை. பாரத் மாதா கி ஜெய்! ஜெய்ஹிந்த்!" என பதிவு செய்துள்ளார்.
அதற்கு அப்ரிடி, "வெற்றியும் தோல்வியும் தவிர்த்து வா, ஒரு தேநீர் அருந்தலாம், ஷிகர். #FantasticTea" என தெரிவித்துள்ளார்.