வங்காளதேசம்-பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை...பிமான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
Direct flights between Bangladesh and Pakistan Biman Airlines announces
டாக்காவில் இருந்து கராச்சி வழியாக இங்கிலாந்துக்கு விமானத்தை இயக்க வங்காளதேச விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என வங்காளதேச உயர் ஆணையர் இக்பால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம் 1971-ல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளும் அடிக்கடி மோதல் போக்கையே கடைபிடித்து வந்தன. இந்தநிலையில் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை ஏற்பட்டதன் படி இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.
மேலும் இந்தநிலையில் பாகிஸ்தானுக்கான வங்காளதேச உயர் ஆணையர் இக்பால் ஹுசைன் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேசினார்.இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை குறித்து அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து தலைநகர் டாக்காவில் இருந்து கராச்சி வழியாக இங்கிலாந்துக்கு விமானத்தை இயக்க வங்காளதேச விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என பாகிஸ்தானுக்கான வங்காளதேச உயர் ஆணையர் இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
English Summary
Direct flights between Bangladesh and Pakistan Biman Airlines announces