அட கடவுளே! மாப்பிளைக்கு நாக்குல சனி! திருமண முடிந்த கையோடு விவாகரத்து! - Seithipunal
Seithipunal


குவைத் நாட்டில் திருமண நடந்து முடிந்த மூன்று நிமிடத்தில் விவாகரத்து நடைபெற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

விவாகரத்து தொடர்பாக நாம் பல்வேறு சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கும் அதற்கான காரணங்களை அறிந்திருப்போம். நீண்ட நாட்கள் வாழ்ந்த பிறகு கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் பிரச்சனை காரணமாக பலர் விவாகரத்து செய்துள்ளனர்.

மனைவியின் நடவடிக்கை சரியில்லை என கணவன் விவாகரத்து கேட்டிருப்பார். மனைவி கணவனின் நடவடிக்கையில்  சந்தேகம் இருப்பதால் விவாகரத்தை கேட்டிருக்கும் சம்பவங்களை நாம் அன்றாட வாழ்வில் தினம் தோறும் பார்த்து வருகிறோம். இங்கிலாந்து  நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்து 90 நிமிடத்தில் விவகாரத்தான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

குவைத் நாட்டில், பல்வேறு எதிர்ப்புகளுடன் இரண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமணம் செய்து வீட்டுக்கு சென்று காரில் இறங்கிய போது காரில் இருந்து மணமகள் தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தபோது மணமகன் மணமகளிடம் " பார்த்து நடக்க தெரியாத முட்டாள்" என்று திட்டியதாக கூறப்படுகிறது .

இதனால் மனம் உடைந்த மணப்பெண்  திடீரென உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை என்று கூறி அதிர்ச்சி அளித்தார். அதுமட்டுமில்லாமல் உடனடியாக நீதிமன்றம் சென்று நடந்த சம்பவங்களை எடுத்து கூறி விவாகரத்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது கோரிக்கை ஏற்று நீதிமன்றம் திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டில் நடந்து முடிந்த மிக கூறுகான குடும்ப பந்தம் என்று கூறப்படுகிறது.  இது பற்றிய செய்தி எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Divorce within three minutes of marriage in Kuwait


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->