பாலியல் வழக்கில் டொனால்ட் ட்ரம்பிற்கு ரூ.42 கோடி அபராதம்..! - Seithipunal
Seithipunal


​அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கு  மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடி அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், அவர் மீதான நீதிமன்ற வழக்குகள் தீவிரமடைந்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்துள்ளது.

ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 1996ஆம் ஆண்டில் ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் அளித்த வழக்கு தொடர்ந்து  மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணையில் ட்ரம்ப் தொடர்ந்து ஆஜராகமலே இருந்து வருகிறார். இதனால் அவருக்கு மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

இதை எதிர்த்து ட்ரம்ப் நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

ஆனால், பெடரல் நீதிமன்றம், மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த அபராதத்தை ட்ரம்ப் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் அதிபராக போகும் ட்ரம்ப் அதற்குள் தன் மீதான வழக்குகளை முடிக்க முயன்று வரும் நிலையில் இது அவருக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump fined Rs 42 crore in sexual assault case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->