முன் எப்போதும் விட இப்போது தான் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - தாக்குதலுக்குப் பின் ட்ரம்ப் பதிவு..!! - Seithipunal
Seithipunal



முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால்  சுடப்பட்டார். இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது அங்கு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், பென்சில்வேனியாவில் பிரச்சாரம் மேற்கொண்டார் . 

பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு, மேடையில் இருந்த ட்ரம்ப் உட்பட அங்கு குழுமியிருந்த அனைவரும் கீழே குனிந்துள்ளனர். 

இந்த நிகழ்வில் ட்ரம்பின் காதை உரசிச் சென்ற தோட்டாவினால், அவரது வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து 20 வயது இளைஞர் ஒருவர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் FBI தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "அமெரிக்கர்கள் எப்போதும் வலிமையானவர்கள். முன் எப்போதும் விட இப்போது தான் நாம் மிகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இதனிடையே இந்த தாக்குதலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump Post After Gun Shot


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->