தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தம்; டொனால்ட் ட்ரம்ப் அதிரடி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட  டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். குறித்த அதிரடி மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகளை அவர் உள்நாட்டில் கொண்டு வருவது மட்டுமல்லாமல், அயல்நாடுகளுக்கும் நெருக்கடி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே ரஷியாவுக்கு அவர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விதித்திருந்தார். அதாவது, உக்ரைன் உடனான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். 

அடுத்ததாக, சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 03 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் மெக்சிகோ உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.  அதன்படி 155 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து எதிர்வினையாற்றியிருந்தார்.

 இதனால், வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகிகின்றார்கள். ஆனால். அதனை பொருற்படுத்தாத  ட்ரம்ப், தென் ஆப்பிரிக்காவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்த உள்ளதாக  கூறியுள்ளார். 

இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்"என்று மேலும் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump takes action to stop the financial assistance provided to South Africa


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->