கர்நாடகாவில் 31 பில்லியனர் எம்எல்ஏக்கள் – சம்பள உயர்வு விவகாரம் பெரும் விமர்சனம் கிளப்புகிறது!
31 billionaire MLAs in Karnataka Salary hike issue draws huge criticism
ஜனநாயக சீர்திருத்த சங்கம், அதாவது Association for Democratic Reforms (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கர்நாடகா மாநிலம் தற்போது அதிகமான பில்லியனர் எம்.எல்.ஏ.க்கள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. மொத்தம் 31 எம்எல்ஏ.க்கள், தங்களுடைய சொத்துகளின் மதிப்பை ₹100 கோடிக்கு மேல் அறிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் 27 பில்லியனர் எம்எல்ஏக்களுடன் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா 18 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கர்நாடகாவின் பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், இவரது சொத்து மதிப்பு ₹1,413 கோடி. தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளவராகவும் இவர் உள்ளார். மும்பையைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பராக் ஷா தான் நாட்டின் எண் 1 பணக்கார எம்எல்ஏ.
கர்நாடகாவின் ப்ரியா கிருஷ்ணா ₹1,156 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில், இவரே நாட்டில் அதிக கடன் வைத்திருக்கும் எம்எல்ஏ என்ற பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள எம்எல்ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ₹63.5 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஆந்திராவை விட சற்று குறைவானாலும், நாட்டின் மேல் நிலைப்பாட்டை காட்டுகிறது. ஆந்திராவில் ₹65 கோடி, மகாராஷ்டிராவில் ₹43.44 கோடி என சராசரி மதிப்பு உள்ளது.
இந்த தகவல்களை மையமாகக் கொண்டு, கர்நாடகா அரசு தற்போது எம்எல்ஏக்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மசோதா ஒன்றை முன்மொழியத் திட்டமிட்டு இருக்கிறது. இந்த மசோதா, சம்பள உயர்வுடன் கூடுதலாக, வீட்டு வாடகை, அலுவலகச் செலவுகள், பயணச் செலவுகள் போன்றவை உயர்த்தப்படுவதைவும்க் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ள எம்எல்ஏ.க்களுக்கு மேலும் இவ்வாறு சம்பள உயர்வு வழங்குவது குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள் சொந்த பணத்தை மக்களுக்காக செலவிட வேண்டிய நேரத்தில், மக்களிடமிருந்து வரும் வரிகளை வைத்து அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுவது சரியா என்ற கேள்வி எழுகிறது.
ADR அறிக்கையின்படி, கர்நாடகா எம்எல்ஏ.க்கள் அறிவித்துள்ள மொத்த சொத்து மதிப்பு ₹14,179 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
31 billionaire MLAs in Karnataka Salary hike issue draws huge criticism