வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம்! காவல்நிலையத்தில் உறவினர்கள்! அதிரவைத்த சம்பவம்!
UP Illegal Affair Mamiyar Marumakan
உத்தரபிரதேசம்: அலிகார் மாவட்டத்தின் மட்ராக் பகுதியில் ஒரு பெண், தனது மகளுக்காக விரைவில் திருமணம் நிச்சயித்திருந்தார். இரு குடும்பத்தினரும் ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில், வரும் 16ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பகிரப்பட்டது.
ஆனால், அந்நிலையில் மணப்பெண்ணின் வருங்கால கணவர் அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வர தொடங்கியதிலிருந்து, வருங்கால மாமியாருக்கும் அவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டது. அதற்குப் பின்னர், அவர் மாமியாருக்கு புதிய செல்போனை பரிசாக வழங்கினார். இருவரும் அதில் நீண்ட நேரம் பேச தொடங்கினர்.
இது, வீட்டினரிடையே சந்தேகத்தை உருவாக்கியது. விசாரணையில் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசுவதாகக் கூறிய மாமியார், ஆழமாக அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்தது.
திருமணத்திற்கு ஏழுநாள் மட்டுமே உள்ள நிலையில், இருவரும் வீட்டை விட்டு தப்பிச் சென்றனர். மேலும், மணமகளுக்காக சேமிக்கப்பட்ட நகை, பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். இருவரது செல்போன்களும் அணைப்பட்ட நிலையில் உள்ளன.
இதையடுத்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
UP Illegal Affair Mamiyar Marumakan