தைவானில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு.!
earth quake in taiwan
தைவானில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு.!
கிழக்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு தைவாம். இந்த நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் நாடு அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி உள்ளது.
இந்த நிலையில், தைவானின் வடகிழக்கு பகுதியில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் 171 கீழ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தைவானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.