தொடர் நிலநடுக்கம் - வீதியில் தஞ்சமடைந்த இந்தோனேசியா மக்கள்.!
earthquake in indonesia
தீவு பகுதியான இந்தோனேசியா பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான ரிங் ஆப் பயர் இருப்பதால் அந்தப் பகுதியில், அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் நேற்று நள்ளிரவு 10.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோ மீட்டர் தொலைவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல், நேற்று மதியம் இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.