அதிகாலையில் அதிர்ந்து போன கட்டிடங்கள் - வீதியில் தஞ்சமடைந்த பொதுமக்கள்.!
earthquake in pakisthan
சமீப காலமாக பாகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலன்டுகத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரைக்கும் வெளியாகவில்லை.