அடுத்தடுத்து கார்கள் மோதி கொடூர விபத்து: துடிதுடித்து உயிரிழந்த 35 பேர்! - Seithipunal
Seithipunal


எகிப்து பெஹய்ரா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் திடீரென அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 

இந்த கொடூர விபத்தில் 35 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 

காயமடைந்தவர்களை மீட்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர ஊர்தி அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற விபத்துக்கள் பெரும்பாலும் வேகம், சாலையின் மோசமான நிலை அல்லது போக்குவரத்து விதிமீறல் போன்றவற்றினால் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egypt cars collided terrible accident 35 people died 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->