ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை - அதிரவைத்த 11 வயது சிறுமி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில காலமாகவே உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு விதங்களில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த சோபியா என்ற சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது. சோபியாவை போலவே அவரது தாயாரும் உலக சாதனை படைத்துள்ளார். முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.

இந்த உலக சாதனையை அந்த சிறுமி தான் வசிக்கும் இடத்தில் உள்ள பொது நூலகத்தில் படைத்தார். இதற்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் தோமஸ் உமாம்போ ஒரே நேரத்தில் 40 ஜெர்சிகளை அணிந்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. இதனை தற்போது சோபியா முறியடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eleven years old girl brake guinness record wear 45 jersey


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->