இந்தியாவுக்கு அல்வா கொடுத்த எலான் மஸ்க்.. சீனாவுடன் திடீர் நெருக்கம்.!! - Seithipunal
Seithipunal


 அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முதல் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்கின் இந்திய பயணம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திடீரென ரத்து செய்யப்பட்டது. பணிச்சுமையின் காரணமாக தனது இந்திய பயணத்தை ரத்து செய்ததாக மஸ்க் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார். 

விரைவில் இந்தியா வரவுள்ளதை அவருடன் எதிர்நோக்கி காத்திருக்கும் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எலான் மஸ்க்கின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது அரசியல்வாசாரம் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. 

இதற்கு இடையே எலான் மஸ்க் இந்தியாவின் அண்டை நாடான சீன பிரதமரை சந்தித்து இருப்பது இந்தியாவுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்த திடீரென ரத்து செய்துவிட்டு இப்போது சீனாவுடன் நெருக்கம் காட்டுவது மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை பொது தேர்தல் நேரத்தில் இந்திய சீன எல்லை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon musk cancelled india trip and visit to China


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->