அடேங்கப்பா..நன்கொடையே 70 மில்லியன் டாலர்!டிரம்புக்கு நன்கொடை அளித்த எலான் மஸ்க்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024-ல் நடைபெறவுள்ளது, இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தல் வெற்றிக்காக டிரம்ப் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் முழு ஆதரவைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மஸ்க், டிரம்ப் பிரசாரத்திற்குப் பெரும் நிதி உதவியாக 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நன்கொடை வழங்கியுள்ளார். இது, அவர் குடியரசு கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளராக உருவெடுக்க காரணமாகும். பென்சில்வேனியாவில் சமீபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், மஸ்க் மற்றும் டிரம்ப் இருவரும் களம் இறங்கி வாக்காளர்களை கவர முயன்றனர். 

இந்த தேர்தலில் முடிவை நிர்ணயிக்கக்கூடிய வலுவான போட்டி மிக்க மாநிலங்களில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மஸ்கின் போன்ற பெரிய தொழிலதிபர்களின் ஆதரவு டிரம்பின் பிரசாரத்தை மேலும் பலப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Musk donates 70 million to Trump


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->