அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம்; ஸ்பானிஷ் மொழி பதிப்பை அகற்றிய ட்ரம்பின் நிர்வாகம்..!
English as the official language of the United States
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நடைமுறைப்படுத்தும் நிர்வாக உத்தரவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதாவது, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் ஆணையை இது இரத்து செய்வதோடு, கிளிங்கடனின் உத்தரவின் படி, கூட்டாட்சி நிதியைப் பெற்ற அரசாங்கமும், அமைப்புகளும் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்களுக்கு மொழி உதவியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், கூட்டாட்சி நிதியைப் பெறும் அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் ஆவணங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து வழங்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய குறித்த உத்தரவு அனுமதிக்கிறது.
.அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக நிறுவுவது தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்துவதோடு, பகிரப்பட்ட தேசிய மதிப்புகளை வலுப்படுத்தவும், மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் திறமையான சமூகத்தை உருவாக்கும் என்று, ட்ரம்ப்பின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலம் பேசுவது பொருளாதார ரீதியாக கதவுகளைத் திறப்பது மட்டுமல்லாமல், புதியவர்கள் தங்கள் சமூகங்களுடன் தொடர்பு கொள்ளவும், தேசிய மரபுகளில் பங்கேற்கவும் உதவுகிறது கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று யு.எஸ். ஆங்கிலம் குழுவில் கூற்றுப்படி, 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஏற்கனவே ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்து சட்டங்களை இயற்றியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளன.
மேலும், பல தசாப்தங்களாக, அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டத்தை அறிமுகப்படுத்தினர். ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், புதிய நிர்வாகம் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழி பதிப்பை அகற்றியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
English as the official language of the United States