'பால்கன்-9 ராக்கெட்' விண்ணில் பாய்ந்தது! சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவாரா?
Falcon 9 rocket blasts off Sunita Williams return to Earth
அமெரிக்காவில் கடந்தாண்டு ஜூன் மாதம் 5ம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பாக, இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணித்தார்கள்.
இதில் 8 நாட்கள் அங்கு தங்கியிருந்து பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

ஸ்பேஸ்எக்ஸ்:
அதைத் தொடர்ந்து பலமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.இதனால், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக, சில தினங்களுக்கு முன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட்டை செலுத்துவதாக இருந்தது.
பால்கன் - 9:
கடைசி நேரத்தில், 'பால்கன் - 9' ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று (மார்ச் 15) புளோரிடாவிலுள்ள விண்வெளி மையத்திலிருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:33 மணிக்கு, ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விரைவில், விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும், சுனிதா மற்றும் வில்மோரை பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
English Summary
Falcon 9 rocket blasts off Sunita Williams return to Earth