தூக்கம் தொடர்பான ஆய்வு.! உயிரிழந்த குழந்தை... ரூ.122 கோடி இழப்பீடு வழங்கிய மருத்துவமனை...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்  பெக்கி மற்றும் ரியான் கெகுலா என்ற உடல் ஊனமுற்ற தம்பதியர். இவர்களை போலவே குழந்தையும் உடல் வளர்ச்சி குறைவாக பிறந்தது. இதையடுத்து அடிக்கடி குழந்தைக்கு தூங்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அவ்வப்போது குழந்தையை பரிசோதித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோரிடமிருந்து குழந்தை ஜாக்சனை அமெரிக்காவின் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை தூக்க ஆய்வுக்காகவும் மருத்துவர்கள் வாங்கிச் சென்றனர். இதையடுத்து தூக்கம் தொடர்பான பரிசோதனையின் பொழுது ​​30 நிமிடங்களுக்கு மேல் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தை இறந்தது.

இந்த சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த மசாசூசெட்ஸ் பொது சுகாதாரத் துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, குழந்தையின் உயிரிழப்பிற்கு இழப்பீடாக பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை, பெற்றோருக்கு 122 கோடி ரூபாய் வழங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

family of a child who died in a sleep study The hospital that paid compensation of 122 crore in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->