சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் - 15 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே இன்று அதிகாலை திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பாதுகாப்புப்படையினர் கைதிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சிறைச்சாலையில், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரைக்கும் 400க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifteen prisoners died in ecuador jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->