கியூபாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ - திணறும் தீயணைப்பு வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal


கரீபிய நாடான கியூபாவில் பினாரெஸ் டி மயாரி வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை காட்டுத்தீ பற்றி பரவத் தொடங்கியது. கடந்த ஏழு நாட்களாக கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயால் பினாரெஸ் டி மயாரி மலைகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் காபி பயிர்கள் உட்பட 2200 ஏக்கர் நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதனிடையே காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் காட்டுத்தீ அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவுவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் காட்டுத் தீயால் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கியூபாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் ரெய்னியர் ராமிரெஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஹோல்குயின் மாகாணத்தின் அண்டை மாகாணமான சாண்டியாகோ டி கியூபாவிற்கு தீ பரவாமல் இருக்க உள்ளூர் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Firefighters battle with wild fire in Cuba


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->