சிதறிய துப்பாக்கி குண்டுகள்..!! பதறிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்..!! பாகிஸ்தானில் பரபரப்பு..!!
Firing near the hotel England cricketers were staying in Pakistan
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலையில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் கோஷ்டி மோதல் காரணமாக துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்தன. அதன் பின்னர் பாகிஸ்தான் மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உட்பட பல அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Firing near the hotel England cricketers were staying in Pakistan