வடகொரியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி! நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்.! - Seithipunal
Seithipunal


வடகொரியாவில் முதன் முதலாக ஒருவனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது பியோங்யாங் நகரில் ஒருவருக்கு ஒரு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை பிறகு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அவசர நிலையை அறிவிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அவசரகால மருத்துவ பொருட்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First omicron case in north Korea curfew imposed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->