குவைத் தீ விபத்து - உரிமையாளரின் பேராசை தான் காரணமா? வெளியான முதற்கட்ட தகவல்!
First Phase Of Information Released On Kuwait Fire Accident
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் மங்காப் நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களே வசித்து வந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு விதிமீறல்களுடன் கட்டப்பட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் எகிப்து நாட்டைச் சேர்ந்த காவலாளி ஒருவர் அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 200 பேர் வரை தங்கி இருந்தனர் என்றும், அவர்களில் 150 பேர் இந்தியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இரவு ஷிஃப்ட் பணிக்கு சென்றிருந்த 20 பேர் இந்த விபத்தில் இருந்து தப்பி விட்டனர். மேலும் 92 பேர் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குவைத்தில் எமிர் ஷேக் அல் சபா விபத்துக்கான காரணம் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி உரியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட தகவலின் படி அந்த குடியிருப்பு உரிமையாளரின் பேராசை தான் இந்த விபத்துக்கு காரணம் என்று குவைத் துணை பிரதமர் கூறியுள்ளார்.
English Summary
First Phase Of Information Released On Kuwait Fire Accident