நிலவுக்கு செல்லும் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி..! - Seithipunal
Seithipunal


விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக கடந்த 2001-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன்முறையாக டென்னிஸ் டிட்டோ என்பவர் தனது சொந்த செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இதனை தொடர்ந்து இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு துணிச்சலான சாகசத்தில் ஈடுபடுவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். 82 வயதுடைய டிட்டோ, கடந்த 2021-ம் ஆண்டு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஆகஸ்டில் ஒப்பந்தம் செய்துள்ளார். 

அந்த ஒப்பந்தத்தின் படி, ஐந்து ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் பயணம் தான் அது. இதில், டிட்டோவுடன் அவரது மனைவி அகிகோ உள்பட மொத்தம் 10 பேர் நிலவு பயணம் மேற்கொள்கின்றனர். இருப்பினும், அப்போது டிட்டோவுக்கு 87 வயது நிறைந்திருக்கும். 

இந்த முதல் நிலவு பயணத்திற்கு முன்பு, ஸ்டார்ஷிப் விண்கலத்தில் தடையின்றி பயணம் செய்வதற்கான பல பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து, டிட்டோ தெரிவிக்கும்போது, பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையுடன், முதியவர் என்ற சாதனையையும் படைத்தவர் ஜான் கிளென். அவருக்கு வயது 77. 

அவரை விட நான் பத்து வயது மூத்தவன் என்று தெரிவித்துள்ளார். அதனால், வயது சாதனைக்கு ஒரு தடையல்ல என்று நிரூபிப்பதற்கான முயற்சியில் தற்போது டிட்டோ தயாராகி வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First space tourist going to moon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->