அமெரிக்கா : திடீரென சாலையில் விழுந்த விமானம்.! ஐந்து பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள ஓகியோ மாகாணத்தில் உலோக உற்பத்தி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வெடி விபத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக அர்கானாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் ஐந்து பேர் சிறிய விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள், பில் அண்ட் ஹலாரி கிளின்டன் விமான நிலையத்தில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து இந்த விமானம், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.

அப்போது, இந்த விமானம் திடீரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே விழுந்தது. இந்த விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died in america flight fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->