விமான விபத்தில் சிக்கி 5 அரசியல்வாதிகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி அரசியல்வாதிகள் உயிரிழந்த சம்பவம்  அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டின் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில், நேற்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என்று மொத்தம் ஆறு பேர்  உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள். 

இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்றுக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்த உயிரிழப்பு தொடர்பாக டுவிட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்தது. மேலும், இடதுசாரி கட்சியின் தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five political parties died for flight accident in colombia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->