சவுதி அரேபியாவில் கனமழை.! வெள்ளத்தில் தத்தளிக்கும் மெக்கா நகரம்.! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் மெக்கா, ரானியா, தைஃப், ஆதம் மற்றும் மேசான் பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் புனித நகரமான மெக்காவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரத்தில் உள்ள வாகனங்கள், கடைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் நகரின் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டன. மேலும் தொடர்ந்து பெய்த கன மழையால் பக்தர்கள் வழிபாட்டை தொடர முடியாமல் தடைபட்டது. இதையடுத்து தீனா, மெக்கா மற்றும் தபூக் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மெக்காவின் வடக்கே உள்ள ஜித்தா கவர்னரேட்டில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மழையினால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க 3,822 பணியாளர்களும், 1,490 உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதாக ஜித்தா நகராட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flash flood ravages mecca city in Saudi Arabia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->