நேபாளம் : நிலச்சரிவு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் - 63 பயணிகளின் கதி என்ன..?! - Seithipunal
Seithipunal



நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திரிசூலி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று (ஜூலை 12) அதிகாலை 3.30 மணியளவில் அந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பயணியர் பேருந்துகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த இரண்டு பேருந்துகளிலும் மொத்தம் 63 பயணிகள் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து நேபாள பிரதமர் புஷ்பா கமல் தெரிவிக்கையில், " நாராயன்பாத் - முகிலின் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் தான் நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. இதில் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் மயமாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது இதையடுத்து பயணிகளைத்  தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்களும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக நேபாள காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் தெரிவித்துள்ளார்" என்று நேபாள பிரதமர் புஷ்பா கமல் தெரிவித்தார். 

இதனிடையே அதிகாலை இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள திரிசூலி ஆற்றில் இந்த பேருந்துகள் அடித்துச் செல்லப் பட்டுள்ளதாலும் பயணிகளை தேடுவதிலும், மீட்புப் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood And Landslide in Nepal 2 Passenger Bus Swept Away With 63 Passengers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->