அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் தடை நீக்கம்-எலான் மஸ்க்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும் அவருடைய ட்விட்டர் உட்பட தவறான தகவல்களை பகிர்ந்ததற்காக 70,000-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இதற்கிடையே டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டரை பயன்படுத்த டொனால்டு டிரம்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தார். அதன் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பால் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் மீதான தடை திரும்ப பெறப்படும் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former US President Trump's Twitter ban lifted Elon Musk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->