15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவையின் புதை படிவம் (Fossil) கண்டுபிடிப்பு..!
Fossil of a bird that lived 150 million years ago discovered in China
15 கோடி ஆண்டுகள் பழமையான குட்டை வால் கொண்ட பறவையின் புதை படிவம் (Fossil) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை, கிழக்கு சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதைபடிவ (Fossil) பறவை பாமினோர்னிஸ் ஜெங்கென்சிஸ் புஜியன் மாகாணத்தின் ஜெங்கே கவுண்டியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பறவையின் வாலானது அதன் குறுகிய வால் பைகோஸ்டைல் எனப்படும் கூட்டு எலும்பில் முடிகிறது.
இந்த பறவை இது நவீன பறவைகளில் தனித்துவமான அம்சமாகும். நவீன பறவைகளின் உடல் அமைப்பு முன்னர் அறியப்பட்டதை விட 02 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பிற்பகுதியில் ஜுராசிக் காலத்தில் தோன்றியது என்பதை இது குறிக்கிறது.
இது குறித்து பழங்கால மானுடவியல் நிறுவனத்தின் (ஐ.வி.பி.பி) ஆராய்ச்சியாளரும், முன்னணி விஞ்ஞானியுமான வாங் மின் கூறுகையில், 'நவீன பறவை போன்ற தோள்பட்டை, டைனோசர் போன்ற கை உள்ளிட்ட தனித்துவமான பண்புகளின் கலவையை இந்தப் பறவை காட்டுகிறது,' என்று கூறுகிறார்.
இந்த 15 கோடி ஆண்டுகள் பழமையான குட்டை வால் கொண்ட பறவையின் புதை படிவம் (Fossil) கண்டுபிடிக்கப்பட்டமை ஆராய்ச்சியாளர்களின் இன்னொரு முன்னேற்றத்தை காட்டுகிறது.
English Summary
Fossil of a bird that lived 150 million years ago discovered in China