கனடாவை சேர்ந்த நான்கு பேருக்கு சீனாவில் மரணதண்டனை..!
Four Canadians sentenced to death in China
கனடாவை சேர்ந்த நான்கு பேருக்கு போதை மருந்து குற்றச்சாட்டில் சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக கனடா கூறியுள்ளது. சீனாவில் போதை மருந்து, உளவு மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்குவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் சீனாவும் ஒன்று என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அத்துடன், சீனா அரசு இரட்டை குடியுரிமையையும் அங்கீகரிக்கவில்லை. மேலும், அந்நாட்டில், வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது அரிதான ஒன்று.

இந்நிலையில், போதை மருந்து விவகாரத்தில் இந்த ஆண்டு கனடாவை சேர்ந்த நான்கு பேருக்கு சீனாவில் கைதாகினர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அந்த நான்கு பேரும் இரட்டை குடியுரிமை வைத்து இருந்ததாகவும், அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வழக்கை நீண்ட காலமாக கண்காணித்து வருகிராதாவும், தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த மரண தண்டனையை தடுக்க கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு சீனா பதில் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும் என்றும்,தாங்கள் சட்டப்படி தான் செயல்பட்டு உள்ளோம். குற்றவாளிகள் குற்றம் செய்ததற்கான உறுதியான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீனாவின் இறையாண்மையை கனடா மதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Four Canadians sentenced to death in China