பாகிஸ்தான் : காவல் வளாகத்திற்குள் தற்கொலை படையினர் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் நுழைந்து அங்கு உள்ளவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தாக்கியுள்ளனர்.  

அவர்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர், அலுவலக கட்டிடத்தின் வழியாக தரையிறங்கி தற்கொலை படையினருடன் பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். 

இது தொடர்பாக சிந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, "இந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலில் இரண்டு போலீசார் உள்பட ஒரு ரேஞ்சர் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் என்று மொத்தம் நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பதினான்கு பேர் காயமடைந்தனர். இதில், மூன்று பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். 

இதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, "பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டு வந்து கொல்லப்படுவார்கள். நாட்டில் தீமையை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for taliban barge in pakisthan police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->