துபாய் மக்களுக்கு குட் நியூஸ்....பசியில் வாடும் மக்களுக்கு இலவச உணவு வழங்கும் இயந்திரம்..! - Seithipunal
Seithipunal


துபாய் முழுதும் பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற நோக்கத்துடன், ஆங்காங்கே சூடான பரோட்டாவை இலவசமாக அளிக்கும் வகையில், 'வெண்டிங்' இயந்திரங்களை துபாய் அரசு நிறுவியுள்ளது.

மேற்காசிய நாட்டின் ஐக்கிய அரபு எமிரேட்சான துபாயில், பிற நாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

பிற நாடுகளிலிருந்து வந்ததில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், 'டெலிவரி' ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களின் குடும்பத்தினருக்காக பணத்தை சேமிப்பதற்கு மூன்று வேளையும் சாப்பிடாமல் உழைக்கின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு முதற்கட்டமாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், 'வெண்டிங் மிஷின்' என்ற, தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவியுள்ளார்.

கடந்த 17ம் தேதி முதல் இந்த உணவு இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இந்த உணவு இயந்திரம் துபாயின், 'அஸ்வாக்' மளிகை கடைகளின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த உணவு இயந்திரங்களில், அரபி ரொட்டி மற்றும், 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்டு வகை உணவுகள், சூடாக தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என்று துபாய் அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free food mechine in dubai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->