கடவுளே.. உனக்கு கருணை இல்லையா..? போரின் கொடூரத்தால் பெற்றோரை இழந்து தவிக்கும் அப்பாவி குழந்தைகள் உள்ள பகுதி எது தெரியுமா..?
Gaza has become the area with the largest number of orphans
போர் காரணமாக பல நாடுகளில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், காசாவில் தொடர்ந்தும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 50,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1163 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள் என்றும், இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
-e53wc.png)
பாலஸ்தீன போர் குறித்து உலகம் முழுவதும் கடுமையான விவாதங்கள் கிளப்பியிருக்கிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதில் தாக்குதலில் இஸ்ரேல் இறங்கியது.
அத்துடன், தன் நாட்டின் மீது முதலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினரை பழிவாங்குகிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாகஉயிரிழப்புகளின் எண்னிக்கை அதிகரித்தது. தொடர்ந்தும், அங்குள்ள மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது.
-e53wc.png)
போரில் மருத்துவமனைகள் பல அழிக்கப்பட்டிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், WHO, Red Cross போன்ற அமைப்புகள் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ விரும்பினாலும், உள்ளே நுழைய இஸ்ரேல் அனுமதி மறுக்கிறது. இதனை ஐநா சபை 'மனிதாபிமான பேரழிவு' என்று கூறியுள்ளது.
இன்னும் காசாவில் 23 லட்சம் மக்கள் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன், பாதுகாப்பு மண்டலங்களில் தங்கியிருக்கும் மக்கள் மீது கூட குண்டு வீசப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில், போர் நிறுத்தம் ஓப்பந்தம் கொண்டு வரப்பட்டாலும் அதை நீட்டிக்க இஸ்ரேல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
குறித்த போர் தொடர்ந்து நீடித்தால் போரில் ஈரானும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
English Summary
Gaza has become the area with the largest number of orphans