பிணைக்கைதிகளை சுரங்கப்பாதையில் அடைத்து வைத்த காசா!
Gaza kept the hostages in the tunne
10 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்இந்த போரில் பலியாகினர்.
கடந்த ஆண்டு நவம்ர் மாதத்தில் ஒருவார காலம் சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதற்கு ஈடுகட்டுவற்காக 100 பிணைக்கைதிகள் ஹமாசிடம் இருந்து விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் காசா மீது போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் காசாவில் மாட்டிக்கொண்டு உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, பிணைக்கைதிகள் 6 பேரின் உடல் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து மீது எடுக்கப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக தெரிவித்துள்ளது.
இன்னும் 97 பிணைக்கைதிகள் ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கிறார்கள். அவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகள் சிக்கிக்கொண்டு உள்ளனர். இஸ்ரே் ராணுவம் ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரம் 6 பிணைக்கைதிகளை கொடூரமாக கொல்லப்பட்ட சுரங்கப்பாதையின் வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளது.
English Summary
Gaza kept the hostages in the tunne