அணுசக்தி அபாயங்கள்.! நாட்டின் கடைசி 3 அணு உலைகளை மூடிய ஜெர்மனி.!
Germany closed its last 3 nuclear reactors as nuclear cautions
ஐரோப்பிய நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், அணுஆற்றல் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ரஷ்யாவின் செர்னோபில் மற்றும் ஜப்பானின் புகுஷிமா அணு உலைகளின் பேரழிவுகளை தொடர்ந்து அணு உலைகளுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பாவில் உள்ள அணு உலைகளை நிரந்தரமாக மூடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெர்மனி தனது நாட்டின் கடைசி மூன்று அணு உலைகளான இசார் 2, எம்ஸ்லண்ட் மற்றும் நெகார் விஸ்தீம் 2 ஆகியவற்றை நிரந்தரமாக மூடியுள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி அமைச்சரவை வெளியிட்ட தகவலில், இந்தக் கடைசி மூன்று அணுமின் நிலையங்கள் நாட்டிற்கு ஆறு சதவீதம் மின்சாரத்தை வழங்கி வந்ததாகவும், தற்போது அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அணு உலைகளை நிரந்தரமாக மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அணுசக்தியால் ஏற்படும் அபாயங்களை தடுக்கவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 16 அணு உலைகளை ஜெர்மனி நிரந்தரமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Germany closed its last 3 nuclear reactors as nuclear cautions