அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட இலங்கை அரசு..! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் [போராட்டங்களில் ஈடுபட்டு, அதிபர் மாளிகையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அவரது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடினர்.

இதைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார்.

இதன் பிறகு,  ஓய்ந்திருந்த போராட்டம் இலங்கையில் மீண்டும் சூறாவளி போல் எழுந்தது. இந்த போராட்டத்தை மாணவ அமைப்பினர் முன்னின்று நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த இலங்கை அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், "ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும்" என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government employers not use in social medias


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->