அரசு அதிகாரிகள் ஐபோன்கள் பயன்படுத்த தடை - எங்குத் தெரியுமா?  - Seithipunal
Seithipunal


அரசு அதிகாரிகள் ஐபோன்கள் பயன்படுத்த தடை - எங்குத் தெரியுமா? 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இதில்,உக்ரைன் மீதான ஆக்ரமிப்பையடுத்து ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. 

இருப்பினும் ரஷியாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே ரஷிய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்களால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது. 

மேலும், ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து உள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தப்படக் கூடாது. 

 பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government officers dont use apple i phone in russia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->