தலைமுடி வெட்டுவதில் உலக சாதனை படைத்த கிரேக்கர்.. ஆச்சரியத்தில் கிரேக்க மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஒருவரின் தோற்றத்திற்கு முக பாவனை அவசியமான ஒன்று. அதற்கு தலைமுடி பெரும் பங்கு வகிக்கிறது. ஒருவரின் தலைமுடி அவரின் பண்பை வெளிப்படுத்துகிறது. இந்த தலைமுடியை அழகுப்படுத்துவதை ஒரு கலையாக பார்க்கப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது முடிகளை வைத்து வகை வகையான டிசைன்களில் தங்களின் அழகை மேருகேற்றி கொள்கின்றனர். இந்நிலையில், கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். 

தலைமுடியில் என்ன சாதனை?.. இவர் ஒருவருக்கு குறைந்த வினாடிகளில் முடி வெட்டியுள்ளார். இதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் 47.17 வினாடிகள். இவர் முடி வெட்டி முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள், முடி வெட்டி கொண்டவரின் தலைமுடியின் நீளத்தை அளந்து, பின்னர் முறையாக பணி முடிந்து இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டனர். 

இதன் பிறகு, கான்ஸ்டன்டினோசின் பெயர் கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றையும், அதில் குறைவான நேரத்தில் முடி வெட்டி கொள்ள விரும்புகிறீர்களா? 45 வினாடிகளில் முடி வெட்டி கொள்ளலாம் வருகிறீர்களா? என அதற்கு தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guinness record for hair cut


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->