அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்.. ஒருவர் பலி.. 5 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. குறிப்பாக போலீசாரை குறிவைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இருந்தபோதிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மட்பக்ஸ் என்ற பெயரில் நடைபெற்ற உணவு திருவிழாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மிசிசிபி புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gun shot in America one dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->