அமெரிக்காவில் தொடரும் இந்துக்கள் மீதான மதவெறுப்பு வாசகம்!....நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்?
Hate speech against hindus continues in america will the government take action
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாப்ஸ் அமைப்பு மூலம் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் சாக்ரமெண்டோ பகுதியில் உள்ள பாப்ஸ் அமைப்பின் இந்து கோவிலில் மர்ம நபர்கள் சிலர் இந்தக்களே திரும்பி செல்லுங்கள் மதவெறுப்பு வாசகத்தை எழுதியுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராபின்ஸ்வில்லி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய இந்து கோவில் என்றும், உலகின் 2வது மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த கோவிலுக்குள் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், கோவிலை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக போலீசார் மதவெறுப்பு வாசகத்தை எழுதிய நபர்களை வலைவீசி தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்தால் அங்குள்ள இந்துக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் இந்துக்கள் மீதான மதவெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Hate speech against hindus continues in america will the government take action